(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு    8. வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு.1 வரை காத்தியாயனரும் பதஞ்சலியும் பாணினியின் “அட்டாத்தியாயீ’ குறையுடையது எனக் கண்டு, பாணினியின் விதிமுறைகளுக்குத் துணையாக வாத்திகம் அஃதாவது உரைவிளக்கம் எழுதிய காத்தியாயனர், பாணினிக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலும் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். தமிழ்ப்பேரகராதி துணை ஆசிரியர் திருவாளர். பி.எசு. சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தந்த ஒரு குறிப்பின்படி காத்தியாயனார்,…