எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்! இராசீவு கொலைவழக்கில் மாட்டிவைக்கப்பட்ட எழுவரும் மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். வலையை அறுத்து மீட்பார் யாருமில்லாமல் அவர்களின் துன்பம் நாளும் பெருகுகின்றது. தமிழக முதல்வரின் பேச்சு, சட்டமன்றத் தீர்மானம், போன்றவற்றால் இவர்கள் விடுதலைஆவார்கள் என்ற நம்பிக்கையும் தேவையற்ற அலுவலக நடைமுறைகளாலும் பாகுபாடு காட்டும் நீதிமன்றங்களின் நடைமுறைகளாலும் கானல்நீராகின்றது. இது தொடர்பான முதல்வரின் சொல்லும் அதிகாரிகளின் செயலும் ஒன்றாகும்வண்ணம் அரசின் போக்கு மாற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை துய்த்த…
தமிழர்கள் எழுவரையும் காப்புவிடுப்பில்(parole)விடுவிக்கப் பழ.நெடுமாறன் வேண்டுகோள்!
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இராசீவு கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழர்கள் ஏழு பேர் விடுதலை குறித்து விடுத்துள்ள அறிக்கை! இராசீவுகாந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்ற ஏழு பேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது. கடந்த 24 ஆண்டுக் காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என்று 2014ஆம் ஆண்டு…