திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 023. ஈகை

(அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 023. ஈகை   ஏழையர்க்கு, வேண்டியன எல்லாம், கொடுக்கும் பயன்கருதாத் தனிக்கொடை.   வறியார்க்(கு)ஒன்(று) ஈவதே ஈகை,மற்(று) எல்லாம்,    குறியெதிர்ப்பை நீர(து) உடைத்து.  எதையும் எதிர்பார்க்காமல், ஏழையர்க்குக் கொடுப்பதே, ஈகை ஆகும்.     222.நல்ஆ(று) எனினும், கொளல்தீதே; மேல்உலகம்    இல்எனினும், ஈதலே நன்று.  நல்செயலுக்காக் கொள்வதும் தீதே; மேல்உலகு இல்எனினும், கொடு.  223. “இலன்”என்னும், எவ்வம் உரையாமை ஈதல்,    குலன்உடையான் கண்ணே உள. “இல்லாதான்”எனச் சொல்லும் முன்னர் ஈதல்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 022. ஒப்புரவு அறிதல்

(அதிகாரம் 021. தீ வினை அச்சம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல் அதிகாரம் 022. ஒப்புரவு அறிதல்  பொதுநல உணர்வோடு, இருப்பதைப் பகிர்ந்து கொடுத்துதவும் பேர்அறம்.  211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு), என்ஆற்றும் கொல்லோ உலகு? எதிர்பார்ப்பைக் கருதாத மழைக்கு, இவ்உலகு, எந்நன்றி செய்யுமோ?  212. தாள்ஆற்றித் தந்த பொருள்எல்லாம், தக்கார்க்கு, வேளாண்மை செய்தல் பொருட்டு. உழைத்துப் பெற்ற பொருள்எல்லாம், தகுதியர்க்கு எல்லாம் உதவவே.  213. புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல்அரிதே, ஒப்புரவின் நல்ல பிற. பொதுக் கொடையைவிடப்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 021. தீ வினை அச்சம்

(அதிகாரம் 020. பயன் இல சொல்லாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்   02. இல்லற இயல் அதிகாரம் 021. தீ வினை அச்சம் தீயைப் போன்று சுட்[டு]அழிக்கும் தீய செயல்களுக்கு அஞ்சுதல்.    201. தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர், தீவினை என்னும் செருக்கு. தீயோர், தீச்செயல்களுக்கு அஞ்சார்; தூயோர் அவற்றிற்கு அஞ்சுவார்.  202. தீயவை, தீய பயத்தலால், தீயவை, தீயினும் அஞ்சப் படும். தீயைவிடத், தீமைதரும் தீய செயல்களைச் செய்தற்கு, அஞ்சுக.  203. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப, தீய, செறுவார்க்கும் செய்யா விடல்….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 020. பயன் இல சொல்லாமை

(அதிகாரம் 019. புறம் கூறாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்  02. இல்லற இயல் அதிகாரம்  020. பயன் இல சொல்லாமை   எதற்குமே பயன்படாத வீண்சொற்களை          என்றுமே சொல்லாத நல்பண்பு.  191. பல்லார் முனியப், பயன்இல சொல்லுவான், எல்லாரும் எள்ளப் படும். வெறுப்பினை ஊட்டும் வீண்சொற்களைச் சொல்வாரை, எல்லாரும் இகழ்வார்.  192. பயன்இல, பல்லார்முன் சொல்லல், நயன்இல, நட்டார்கண் செய்தலின் தீது. நண்பரிடம் விரும்பாதன செய்வதைவிட, வீண்சொல் கூறல் தீது.  193. நயன்இலன் என்பது சொல்லும், பயன்இல, பாரித்(து) உரைக்கும் உரை….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 019. புறம் கூறாமை

    (அதிகாரம் 018. வெஃகாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.இல்லற இயல் அதிகாரம் 019. புறம் கூறாமை ஒருவர் இல்லாத பொழுது அவரைப் பற்றிக் கோள்கூறாமை.  181. அறம்கூறான், அல்ல செயினும், ஒருவன்,   புறம்கூறான் என்றல் இனிது. அறத்தைக் கூறாது, தீமைகளைச் செய்யினும், கோள்கூறாமை இனிது.  182. அறன்அழீஇ, அல்லவை செய்தலின் தீதே,  புறன்அழீஇப், பொய்த்து நகை. பின்னே பழிப்பும், முன்னே பொய்ச்சிரிப்பும், அறஅழிப்பினும் தீது.  183. புறம்கூறிப், பொய்த்(து)உயிர் வாழ்தலின், சாதல், அறம்கூறும் ஆக்கம் தரும். பழிசொல்லும் பொய்வாழ்வைவிட, இறத்தல்,…