காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ – முனைவர் சான் சாமுவேல்
(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 –தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ மேற்கூறிய பிற உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டு ஒப்புமைக் கூறுகளைக் காலுடுவெல் வெளிப்படுத்தியதன் விளைவாகத் தமிழ்மொழி குறித்து 19-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய குறுகலான எண்ணங்கள் தூள்தூளாகச் சிதைந்தன. தமிழக மண்ணின் அடிவரை ஆணிவேரை மிக ஆழமாகச் செலுத்தி உலகெங்கிலும் விழுதுகளைப் பரப்பி, விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் நிலையில் உலகெங்கும் கிளை பரப்பிய மிகப் பிரமாண்ட ஆலமரமாக காலுடுவெல்லின் ஆய்வால் தமிழ்மொழி காட்சிதரத் தொடங்கியது. சமற்கிருதத்தின் திரிந்த வடிவமாக 18-ஆம் நூற்றாண்டுவரை…
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ – முனைவர் சான் சாமுவேல்
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ ஐரோப்பிய நாட்டு அருட்தொண்டர்களுள் காலுடுவெல்லின்(Caldwell) அளவிற்குத் தமிழாய்வில் மிகப்பெரும் பங்களிப்பு நல்கியோராக எவரையும் குறிப்பிட முடியவில்லை. தமிழரின் விழுமிய அறக்கோட்பாடுகள் ஐரோப்பிய நாட்டு அறிஞர் உலகில் பரவ அடியெடுத்துக் கொடுத்தார் வீரமாமுனிவர் எனப்பெயரிய பெசுக்கி எனும் இத்தாலிய நாட்டு இறைத்தொண்டர். அச்சுப்பொறியினைத் தரங்கை மண்ணில் நிறுவி நவீன இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து அச்சுக்கலையினைத் தமிழர் கையில் வழங்கினர் சீர்திருத்தச் சபையினைத் தமிழ் மண்ணில் நிறுவிய செருமன் நாட்டு இறையடியார் சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg) அவர்கள். தமது முன்னோடிகளான இவர்களது…