சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 741. Additional Court கூடுதல் நீதிமன்றம் நீதிமன்றத்தின் பணிச்சுமையைப் பகிர்வதற்காகத் துணைச் சேர்க்கையாக அமைக்கப்படும் நீதிமன்றம் கூடுதல் நீதிமன்றம் ஆகும். கூடுதல் நீதிமன்றம் என்பது இயல்பான நீதிமன்றமாகவும் இருக்கலாம், அமர்வு நீதிமன்றம் முதலிய பிற நீதிமன்றமாகவும் இருக்கலாம். Additional District Magistrate மாவட்டக் கூடுதல் குற்றவியல் நடுவர் மாவட்டக் குற்றவியல் கூடுதல் நடுவர் கூடுதல் மாவட்டக் குற்றவியல் நடுவர் கூடுதல் மாவட்டத்திற்கான…
சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 731. Adaptation தழுவமைவு தகவமைவு வழியாக்கம் இந்தியச் சட்டத்தின் கீழ் தழுவல் என்பது அடிப்படையில் வடிவமைப்பின் மாற்றமாகும், அஃதாவது பதிப்புரிமை பெற்ற படைப்பு ஒரு வடிவமைப்பிலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றப்படுவது. கணிசமான அளவு புதிய உள்ளடக்கத்தைச் சேர்ப்பதன் மூலம் தழுவல் படைப்பு உருவாக்கப்பட்டால், அத்தகைய வேலை இந்தியப் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழ் தழுவலாகக் கருதப்படாது. சிலர் தழுவி எழுதி முற்றிலும் தனதுபோல் காட்டிக்கொள்ளவர்….
சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 721-730 721. Ad Interim இடைக்கால இடைப்பட்ட காலத்துக்குரியதை அல்லது இடைப்பட்டக் காலத்தில் நேர்வதைக் குறிப்பது. இலத்தீன் தொடர் 722. Ad Interim Injunction இடைக்கால நெறிகை இடைக்கால ஏவுரை இடைக்கால உறுத்துக் கட்டளை இடைக்கால உறுத்தாணை இடைக்கால ஏவாணை இடைக்காலத் தடையாணை வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது நீதி மன்றத்தால் வழங்கப்படும் இடைக்காலத் தடையாகும். விண்ணப்பதாரர் இத்தடை…
சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 711. Actus Reus Non Facit Reum Nisi Mens Sit Rea குற்றம் புரியும் நோக்கில் செய்யாத செயல் குற்றமாகாது. குற்ற மனமில்லாத வரை செயல் ஒருவரைக் குற்றவாளியாக்காது, என்பதே இதன் விளக்கமாகும். பொது விதியாக, மனப் பிழை இல்லாமல் மேற்கொள்ளும் செயலுக்குக் குற்றவியல் சட்டம் பொறுப்பாக்காது. எனவே, மனமும் செயலும் சட்டமுரணாக இருந்தால்தான் ஒருவரைக் குற்றவாளி என்று சொல்ல இயலும். இலத்தீன்…
சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 701. Actuary பத்திரச் சான்றர் பத்திரச் சான்றாளர் காப்பீட்டு ஆலோசகர் காப்பீட்டு அறிவுரைஞர் காப்பீட்டு மதிப்பீட்டாளர் வாணாள் காப்பீட்டு நலன்கள், காப்பீட்டுப் பத்திரங்கள் முதலியவற்றை மதிப்பிடும் வல்லுநர். (ஆ.கா.க.சட்டம்(L.I.C.Act), பிரிவு 2(1) 702. Actuate தூண்டு செயல்படுத்து ஒரு செயல் நிகழ உந்துதலாக இருப்பது மேற்குறித்தவாறு பொதுவான பொருளில் வரும் இச்சொல், சட்டத்துறையில் ஒரு குற்றச்…
சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 691. Actual Or Express Notice நேரடியான அல்லது வெளிப்படையான புரிதல் நிகழ்வு, கோரிக்கை, உரிமை கோரல்,செயல்முறை குறித்த உள்ளபடியான அல்லது வெளிப்படையான புரிதல். notice என்றால் அறிவிப்பு எனக் கொள்வதைவிட அறிதல், புரிதல், உணர்தல் என்ற முறையில் கவனிக்கப்படுவதைக் குறிப்பதாகக் கொள்வதே சரியாகும். ஓர் உண்மை உள்ளதை ஒருவர் அறிதலே அல்லது நிகழ்வு அல்லது உண்மை பற்றிய அறிவை ஒருவர் உள்ளவாறு…
சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 681. acts justified by law சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் ஞாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் நயன்மைப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் முறைமைப்படுத்தப்பட்ட செயல்கள் நிகழ்வுகளின் உண்மை நிலை குற்றம் நடந்துள்ளது என்பதைக் காட்டினாலும் குற்றம் செய்ததாகத் தவறாகக் கருதப்படுபவர், தான் இதில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் எனப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 682. Acts regarded as trivial அற்பமாகக் கருதப்படும் செயல்கள் …