அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 56-58 – சமூகம்
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 53-55-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 56. மூத்த மாப்பிள்ளை ஒரு சமயம் நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தபோது, அவர் தன் அருகில் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். “இவர்தான் எங்கள் வீட்டு முதல் மாப்பிள்ளை. பெரிய மாப்பிள்ளையும் கூட. இவர் மிகவும் நல்லவர். ஏனெனில் எங்கள் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்துள்ளார். இதற்காக எங்கள் குடும்பமே இவருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது” என்று முகமலர்ச்சியுடன் கூறினார். நான் வியப்படைந்து, அப்படிப்பட்ட உதவி இவர் என்ன செய்தார்?”…