(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 65 : மீனவனைப் பழித்தல்-தொடர்ச்சி) பூங்கொடி சாதி ஏது?           சாதி என்றொரு சொல்லினைச் சாற்றினீர் ஆதியில் நம்மிடம் அச்சொல் இருந்ததோ?                 பாதியில் புகுந்தது பாழ்படும் அதுதான்;          155           தொழிலாற் பெறுபெயர் இழிவாய் முடிந்தது; அழியும் நாள்தான் அணிமையில் உள்ளது; பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென் றோதிய திருக்குறள் உண்மைநும் செவிப்புக விலையோ?               கதிரும் நிலவும் காற்றும் மழையும்         160           எதிரும் உமக்கும் எமக்கும் ஒன்றே! தவிர்த்தெமை நும்பாற் சாருதல் உண்டோ? கபிலர் அகவல்…