(உ.வே.சா.வின் என் சரித்திரம் 113: அத்தியாயம் – 75: இரண்டு புலவர்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-76 தல தரிசனம் திருக்குற்றாலத்தில் சில தினங்கள் தங்கிப் பிறகு ஆதீனத்திற்குரியகிராமங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே சுப்பிரமணிய தேசிகர் யாத்திரை செய்யலானார். வேணுவன லிங்கத் தம்பிரான் ஆட்சியின் கீழிருந்த அந்தக் கிராமங்கள் திருவாவடுதுறை மடத்தின் சீவாதாரமாக உள்ளவை. அவற்றில் கம்பனேரி புதுக்குடி என்பது ஒரு கிராமம். அதை விலைக்கு வாங்கிய சுப்பிரமணிய தேசிகர் தம்குருவின் ஞாபகார்த்தமாக அம்பலவாண தேசிகபுரமென்ற புதிய பெயரை வைத்தார். அங்கே தேசிகர் ஒரு நாள் தங்கினார். ‘வெள்ளி…