(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 68 : 14. சுவடியின் மரபு தெரிவுறு காதை-தொடர்ச்சி) பூங்கொடி சங்கப் புதையலும் – சிலம்பின் சான்றும் இத்தகு பகைஎலாம் எதிர்த்துத் தப்பின            பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்,அச்         25           சங்கப் புதையலும் சாமி நாதத் துங்கன் உழைப்பால் தோண்டி எடுத்தோம்; சிற்றூர் யாங்கணுஞ் சென்றுசென் றோடிப் பெற்றஅவ் வேடுகள் பெருமை நல்கின;           இத்தொகை நூல்களும் புத்தக உருவில் 30           வாரா திருப்பின் வளமிலா மொழிஎன நேரார் பழித்து நெஞ்சம் மகிழ்வர்; நல்லோன்…