கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்! – சிவ.சூரிய நாராயணன்
கவிஞர் வேணு.குணசேகரன் மங்காத மாக்கவிதை நூல் செய்தார்! கூடல் திருநகரில் கூடிக் களித்திருந்த பாடல் தொழில்செய்யும் பைந்தமிழ்ச் சங்கத்தார் ஏடுதனில் உள்ளம்மை ஈதென்ன விந்தையென்றே ஈடில் மொழியம்மை இன்னமுத ஊற்றம்மை கேடில் விழுச்செல்வம் கேளாது தந்தம்மை வாடும் களித்தே குணசே கரன்தன்னைப் கூடிக் களித்தே குணசே கரன்தன்னைப் பாடிடச் சொன்னாயே பாட்டேலோர் எம்பாவாய் ! அன்னை இடம்வைத்த ஆலங் குடியானை மின்னும் பிறையானை விண்ணின் நதியானை முன்னைப் பழம்பொருளை முத்துக் கவித்தமிழில் கன்னற் கிணையாக்க் கள்ளின் சுவையாகத் தன்னிகர் இல்லாத தன்மைத்தாய்த் தந்தாரே மன்னும்…