(உ.வே.சா.வின் என் சரித்திரம் 93 : அத்தியாயம்-58 : எனக்கு வந்த சுரம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-59 திருவிளையாடற் பிரசங்கம் நானும் என் தந்தையாரும் நிச்சயித்தவாறே வைகாசி (1874சூன் மாதம்) மாத இறுதியில் என் பெற்றோர்களுடன் நான் செங்கணத்தைநோக்கிப் புறப்பட்டேன். முதலில் அரியிலூருக்குச் சென்றோம். அங்கே ஒருவேளை தங்கிச் சடகோபையங்காருடன் பேசினோம். பிள்ளையவர்களுடையவிசயங்களைப் பற்றி அவர் ஆவலுடன் விசாரித்தார். அரியிலூரில் முன்புபழகினவர்களெல்லாம் எங்கள் வரவை அறிந்து வந்து பார்த்துச் சென்றனர். செங்கண நிகழ்ச்சிகள் பிறகு நாங்கள் குன்னத்தின் வழியே செங்கணம் சென்றோம். அங்கேவிருத்தாசல ரெட்டியாரும் வேறு…