(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 60 : இசைப்பணிக்கு எழுக எனல்-தொடர்ச்சி) பூங்கொடி தந்தையின் சீற்றம்           மறைபிறர் அறிய மலர்ந்தஅவ் வலர்மொழி குறையிலாக் களமர் குலமகன் செவிபுகத் தணியாச் சினமொடு தன்மகட் கூஉய்த் `துணியாச் செயல்செயத் துணிந்தனை! என்குல               அணையாப் பெருமையை அணைத்தனை பேதாய்!         30           நினைகுவை நீயிப் பழிசெய என்றே நினைந்தேன் அல்லேன் முனைந்தாய் கொடியாய்! மேதியிற் கீழென மேலோர் நினைக்கச் சாதி கெடுக்கச் சதிசெய் தனையே!                 வீதி சிரிக்க விளைத்தனை சிறுசெயல்! 35 இற்செறித்தல்          …