(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 44. செட்டியாரும் காகமும் செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம். மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது. நரி – “காக்கா காக்கா – உன் குரல் எவ்வளவு அழகாக – இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது. காகம் அதை நம்பி, வாய்திறந்து – கா கா என்றது. உடனே மூக்கிலிருந்த வடை விழவே – அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது….