தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? நலம், வளம், தளர்வின்மை, விடாமுயற்சி, நம்பிக்கை, ஆற்றல், வெற்றி, பெருமை, செல்வம், இன்பம், மகிழ்ச்சி, புகழ், உயர்வு, சிறப்பு, வாணாள், துணிவு, எல்லாமும் பெற்றுத் தமிழுடன் நூறாண்டு வாழ இத்தமிழர் திருநாளில் வாழ்த்துகிறேன். அதே நேரம் தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா என்ற சிந்தனையும் எழுகிறது. தமிழர் திருநாளைத் தமிழர் திருநாள் என்றுகூடச் சொல்ல மனமின்றித் தமிழரே திராவிடர் திருநாள் என்கின்றனரே! தமிழ் நாடாக இருந்தாலும் பிற நாடாக இருந்தாலும் தமிழர் கொண்டாடும்…