(தமிழர் பண்பாடு, தொடர்ச்சி – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு-7 கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம் இலக்கிய மரபுகளும் மக்கள் வாழ்க்கை முறையும் இராமாயணத்திலிருந்து பழந்தமிழர் நாகரீகம் குறித்து மிகச் சிலவற்றை மட்டுமே பெற இயலும். இப்பொருள் பொறுத்தவரையில், இராமாயணம், மிகப் பெருமளவில் ஒரு தலைப்பட்ட அகச்சான்றாகவே இருக்க முடியும் என்பதை நினைவு கோடல் வேண்டும். நினைத்தாலே திகில் ஊட்டும் பகைவர்களாகவே இராட்சதர்களை, ஆரியர்கள் கருதினர். ஆதலின் அவர்கள், அதற்கேற்ப உடலமைப்பில், மனிதரைத் தின்னும் அரக்கராகவும், கொடுமையின் கோர…