தமிழர் புத்தெழுச்சியும் பாரதிதாசனும் – சிறப்பரங்கம்
சித்திரை 27, 2046 / மே 10, 2015
இடித்தெழும் கவிதைக் கீற்று! – சந்தர் சுப்பிரமணியன்
உள்ள வெள்ளம் ஊற்றென உளத்துள் தோன்றும் .. உணர்வுகள் தொண்டை சேருங் காற்றினை உதறச் செய்து .. கவிதையாய் உதட்டுக் கீனும்; ஏற்புடைத் தரத்தில் உண்டா .. இலக்கணம் சரியா என்று சாற்றிடும் போதென் நெஞ்சம் .. சரிவரப் பார்ப்ப தில்லை (1) மீட்டிடின் நீளும் நாதம் .. முதற்செவி சேரும் முன்னர் ஊட்டிடும் விரலி னூடே .. உணர்வினால் உள்ளம் சேர்ந்து காட்டுமோர் மோக மாயை, .. காண்கையில் மயங்கும் போது கூட்டியோ குறைத்தோ பாட்டைக் .. கொன்றிடல் இயல்பு தானோ?…