‘நீராருங் கடலுடுத்த’ பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே என அறிவாளிகள்(!) உணரட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
‘நீராருங் கடலுடுத்த’ பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே என அறிவாளிகள்(!) உணரட்டும்! “நீராருங்கடலுடுத்த” என்னும் மனோண்மணியம் சுந்தரனாரின் பாடல் அருமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே! தமிழ்த்தேசியப் போர்வையில் திராவிடத்தை எதிர்ப்பவர்கள் அறியாமையால் இதனைத் திராவிட வாழ்த்தாகப் புரிந்து கொண்டு எதிர்க்கிறார்கள். இதன் மூலம் போலித் தமிழ்த்தேசியவாதிகள் ஆரியத்திற்குத் துணைநிற்கிறார்கள். அதே நேரம் ஆளுநர் இரவி போன்ற பா.ச.க. தலைவர்களுக்குத் திராவிடம் என்ற சொல்லே எட்டிக்காயாக இருப்பதால் இதனை எதிர்க்கிறார்கள். பாசக தலைவர் இரவி “திராவிட நல் திருநாடு” என்னும் தொடரை நீக்கியமை குறித்து ஏதும்…