திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா? – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்க௪. தமிழுக்குச் சிறை? இன்று வாழும் தமிழ் மக்களுக்குத் தாங்கள் பயன்படுத்தும் சொற்கள் தமிழ்ச்சொற்களா? வேற்றுமொழிச் சொற்களா? எனத் தெரியாது. ஏனெனில், இடைக்காலத்தில் தமிழகத்தில் ஆரியம் புகுந்து, தன் மொழி சமற்கிருதத்தைத் தமிழுடன் கலந்து எழுதி, தமிழும், வடமொழியும் (சமற்கிருதம்) கடவுளின் (சிவனின்) இருவிழிகள் என்றும் சமற்கிருதம் “தேவபாசை” என்றும் கதைகட்டி விட்டனர். இதுகொண்டு தமிழ்மக்கள் மயங்கி தமிழ்ச் சொற்களை விட்டு வடமொழிச் சொற்களை மிகுதியாகக் கலக்கத்…

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௩. தமிழ் வாழுமா? வளருமா?

(௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் க௩. தமிழ் வாழுமா? வளருமா?    க.  தமிழ் மக்களின் பேச்சிலும், எழுத்திலும் தமிழில்லை!    உ. தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை!    ௩. தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப்பெயர்கள் பல தமிழில்       இல்லை!    ௪. தமிழர் எழுதும் நூல்கள் தமிழில் முழுமையாக       எழுதப்பெறவில்லை.    ரு. தமிழகப் பாடநூல் நிறுவனத்தார் முதல் வகுப்புக்குரிய       தமிழ்ப்பாட நூலில் வடமொழி ஒலியெழுத்துகளாம்        கிரந்த எழுத்துகளை (ஸ, ஷ, ஹ,…

ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(௪.  திருத்தமாய்ப் பேசுங்கள்!–வி.பொ.பழனிவேலனார், தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன இன்றைய தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கென செய்து வரும் பணிகள் பலவாகும்.  தஞ்சையில் தொடங்கவிருக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகம் அவற்றிற்கு முத்தாய்ப்பு வைத்தது போன்றதாகும்.  ஆயினும், நடைமுறையில் சில வழுக்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல தமிழ்க்கல்லூரிகள் உள்ளன.  ஆண்டுதோறும் தமிழ்ப்புலமை பெற்று வெளியேறுகின்றனர்.  பலர் தமிழாசிரியர் பயிற்சியும் பெறுகின்றனர்.  தமிழ் பயின்று, தமிழாசிரியர் பயிற்சியும் முடித்த பல்லாயிரவர், பணியின்றி வாடுகின்றனர்.  ஆனால், அஞ்சல்வழியும், தனியேயும் பலர் படித்துத் தமிழாசிரியராகி விடுகின்றனர். தமிழ்க்…

தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்

(சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை  முன்னுரையும்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்           க. தமிழ் வளர்ப்போம் இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கை இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், லட்சியம், லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர்.  தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை,  வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர்.  ஆரியர் தமிழ்நாட்டிற்குள் வந்த பின்னர்,…