தமிழர் பண்பாடு – புலவர் கா.கோவிந்தன்
(தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை + புலவர் கா.கோவிந்தன்- தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 4 தமிழர் பண்பாடு வேடன் எப்போதும் பொய்த்துப் போகாமல், ஆண்டுதோறும் பெய்யும் பருவமழையால் தென்னக மேட்டு நிலப்பகுதி, ஆண்டாண்டு காலமாக அரிப்புற்று அரிப்புற்று வந்ததன் விளைவால் சிறுசிறு குன்றுகள் நிற்கும் பரந்து கிடக்கும் நிலப்பரப்பாகும் குறிஞ்சியே, தென்னிந்திய மனிதன் வாழத் தொடங்கிய நனிமிகத் தொன்மை வாய்ந்த நிலப்பகுதியாம். அம் மலைநாட்டின் அடிவாரத்தில், தண்டகன் என்ற அரசன் பெயரிடப்பட்ட, தன் நிலைபேற்றிற்காக, ஆதி மனிதன் மேற்கொண்ட வாழ்க்கைப்…