தி.மு.க.வின்மீதான கசப்பு குறையவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுகவின்மீதான கசப்பு குறையவில்லை!   மிகுதியான மன்பதை நலன் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய முதல்வர்களில் முதலாமவர் என்றால் கலைஞர் கருணாநிதிதான் இடம் பிடிப்பார். கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் எவரேனும் தமிழ்ப்பற்றுடன் எந்தக் கட்சியிலேனும் இருந்தார் எனில் அவர் கலைஞர் கருணாநிதியின் பேச்சாலோ எழுத்தாலோ கவரப்பட்டிருப்பார்.  கட்டியணைக்க வேண்டிய நேரத்தில் கட்டியணைத்தும் அணைத்து வெட்டிவிட வேண்டிய நேரத்தில் வெட்டியணைத்தும்(அழித்தும்)விடும் வல்லமையும் அவருக்கு மிகுதியாகவே உண்டு. உலக அளவில் மிகுதியான படைப்புகளை வழங்கியுள்ள முதல் அரசியல் தலைவரும் அவர்தான். என்றாலும் மக்கள்திலகம் ம.கோ.இரா எனப்படும் எம்ஞ்சியார் உருவாக்கிய…

பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு

பிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு    விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்க முயன்ற ஒவ்வொரு கட்சியும் அவர் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்ததும்   அவரையும்  வைகோவையும் தாழ்த்தியும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.   அப்படியானால்  இவர்கள் ஏன்,  விசயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக்கப் பலவாறாக முயன்றனர். விசயகாந்துடன் இணைந்ததால் ம.ந.கூட்டணியைத் தாழ்வாகக் கூறுகின்றனரே, அப்படியானால், தங்களைவிட இக்கூட்டணி உயர்வானது, அத்தகைய உயர்வான கூட்டணி ஏன் விசயகாந்துடன் இணைந்தது என்கின்றனரா?  தேர்தலில் கூட்டணி என்பது வெற்றிக்கான தொகுதி உடன்பாடேயன்றிக் கொள்கைக் கூட்டணியன்று. எனவே, வேறுவகையில்…

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

திராவிடக்கட்சிகள் எனப் பொதுவாகக் குறை கூற வேண்டா!  தேர்தல் அரசியலுக்காகப் பெரும்பான்மைக் கட்சிகள் திராவிடக் கட்சிகளை ஒழிப்போம் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்போக்கு வரலாற்றை மறைப்பதாகும். குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (திருக்குறள் 504) எனத்   தெய்வப்புவலர் திருவள்ளுவர் நமக்கு வழிகாட்டியுள்ளார்.   எதிர்க்கும் கட்சிகளின் நிறைகளைக் கூறுவதற்கு மனம் வராதுதான். அதற்காக ஆற்றிய யாவும் தீமை என்பதுபோல் பேசக்கூடாதல்லவா? குறைந்தது குறைகளைப் பட்டியலிட்டு இத்தகைய குறைகளுக்காக இவற்றை ஆட்சிக்கு மீண்டும் வரச்செய்யக்கூடாது என்று சொல்லாம் அல்லவா?  …

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்!     நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016)  பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான்  கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல்  நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும்  என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன…

பாசகவின் நாடகத்திற்கு எடுத்துக்காட்டு, கச்சத்தீவு நிலைப்பாடு

  – தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013   கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாரதிய சனதா:     “கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது.   “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். கேள்விக்கே இடமில்லை:  இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு…

தேர்தல் – நினைத்தனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

  அகரமுதல இதழின் சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014 நாளிட்ட இதழுரையில் ‘வாக்கு யாருக்கு?’ என்னும் தலைப்பில்  தமிழ் நேயர்களின் எண்ணங்களை எதிரொலித்திருந்தோம். தேர்தல் முடிவு வந்துவிட்டது. 16ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். நம் எண்ணங்களின் சுருக்கத்தையும் அவை நிறைவேறியுள்ளனவா என்பதையும் பார்ப்போம். 1.) காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும். .. காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும்.  இந்தியா முழுமையும் காங். பரவலாக மண்ணைக் கவ்வி 44 இடங்களில் மட்டுமே வெற்றி…

திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: விசயகாந்து பேச்சு

  “திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் செய்த கட்சிகள்” என தேமுதிக தலைவர் விசயகாந்து தெரிவித்தார். தேசிய சனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் பேராசிரியர்  சே.கே.இரவீந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக தலைவர் விசயகாந்து யானைக்கவுனியில் வாக்கு  திரட்டினார். அப்போது, விசயகாந்து பேசிய தாவது: “தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இந்நிலையில், முதல்வர் செயலலிதா குசராத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார். ஏற்கெனவே, மதுரவாயல் மேம்பாலம் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. மதுரவாயல் பாலம் திட்டத்துக்கு, ஏற்கெனவே…

வாக்கு யாருக்கு?

  யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன.   இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில்  வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள…