(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 –தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾                                                                                                                                                  மேற்கூறிய பிற உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டு ஒப்புமைக் கூறுகளைக் காலுடுவெல் வெளிப்படுத்தியதன் விளைவாகத் தமிழ்மொழி குறித்து 19-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய குறுகலான எண்ணங்கள் தூள்தூளாகச் சிதைந்தன. தமிழக மண்ணின் அடிவரை ஆணிவேரை மிக ஆழமாகச் செலுத்தி உலகெங்கிலும் விழுதுகளைப் பரப்பி, விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் நிலையில் உலகெங்கும் கிளை பரப்பிய மிகப் பிரமாண்ட ஆலமரமாக காலுடுவெல்லின் ஆய்வால் தமிழ்மொழி காட்சிதரத் தொடங்கியது. சமற்கிருதத்தின் திரிந்த வடிவமாக 18-ஆம் நூற்றாண்டுவரை…