ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(௪.  திருத்தமாய்ப் பேசுங்கள்!–வி.பொ.பழனிவேலனார், தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன இன்றைய தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கென செய்து வரும் பணிகள் பலவாகும்.  தஞ்சையில் தொடங்கவிருக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகம் அவற்றிற்கு முத்தாய்ப்பு வைத்தது போன்றதாகும்.  ஆயினும், நடைமுறையில் சில வழுக்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல தமிழ்க்கல்லூரிகள் உள்ளன.  ஆண்டுதோறும் தமிழ்ப்புலமை பெற்று வெளியேறுகின்றனர்.  பலர் தமிழாசிரியர் பயிற்சியும் பெறுகின்றனர்.  தமிழ் பயின்று, தமிழாசிரியர் பயிற்சியும் முடித்த பல்லாயிரவர், பணியின்றி வாடுகின்றனர்.  ஆனால், அஞ்சல்வழியும், தனியேயும் பலர் படித்துத் தமிழாசிரியராகி விடுகின்றனர். தமிழ்க்…

உ. உயர்தனிச் செம்மொழி-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்        உ. உயர்தனிச் செம்மொழி ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்)  தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்;  வேறொருவர், பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும்  என்கின்றார்;  இன்னொருவர், அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுத, பேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும்.  அன்றுதான் அறிவியல்தமிழ் வளரும் என்று சொல்கின்றார்; ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதை;  தமிழ்ச்சங்கள் இருந்தனவென்பதற்குச்…

தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்

(சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை  முன்னுரையும்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்           க. தமிழ் வளர்ப்போம் இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கை இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், லட்சியம், லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர்.  தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர். ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை,  வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர்.  ஆரியர் தமிழ்நாட்டிற்குள் வந்த பின்னர்,…