(உ.வே.சா.வின் என் சரித்திரம் 91 : அத்தியாயம்-56 : நான் இயற்றிய பாடல்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-57 திருப்பெருந்துறை மார்கழி மாதம் திருவாதிரைத் திருநாள் நெருங்கியது. திருவாதிரைத்தரிசனத்துக்குத் திருப்பெருந்துறைக்குச் சென்று புராண அரங்கேற்றத்தைமுடித்துக்கொண்டு திரும்பலாமென்று என் ஆசிரியர் நிச்சயம் செய்தார்.எல்லாரிடமும் விடை பெற்று அவர் (1873 திசம்பர்) புறப்பட்டார்.மாயூரத்திலிருந்து சவேரிநாத பிள்ளை எங்களுடன் வந்தார். வேறு சிலமாணாக்கர்களும் வந்தார்கள். சுப்பிரமணிய தேசிகர் மடத்துப் பிரதிநிதியாகப்பழநிக் குமாரத் தம்பிரானென்பவரை அனுப்பினர். புறப்பாடு எல்லாரும் சேர்ந்து புறப்பட்டோம். திருவிடைமருதூர் சென்று அங்கேதங்கி அப்பால் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்…