தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார், ஆ. வீரமாமுனிவர்
தமிழுக்குவளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். 1. அச்சுக்கலைத் தந்த ஆந்திரிக்கசு அடிகளார் முன்னுரை : உலக மொழிகள் மூவாயிரத்துக்கு மேற்பட்டவை. உலகின் முதன் மொழியாக ஒளியுடன் மிளிர்வது தமிழ். இரண்டாயிரத்துப் பத்து மொழிகளில் இடம் பெற்றுள்ள விவிலியத் திருநூல், பாபேல் கோபுரம் கட்டப்பட்டபோது ஒரே மொழியாகத் தமிழ் திகழ்ந்ததைத் தெளிவுறுத்துகிறது. தொடக்கநூலில் (1:1-2)இரண்டு தொடர்கள் இச்செய்தியை எடுத்துரைக்கின்றன. உலகம் முழுவதும் ஒரே மொழியும் ஒரே வார்த்தையும் இருந்தன. பாபேல் கோபுரத்தை கட்டிய பெருமைக்குரியவர் தமிழர். கிழக்கே இருந்து சென்ற தமிழர் சிநேயார்ச்சு சமவெளியில் தங்கி…