தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்
தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்துக! அறிஞர்களைப் போற்றும் அரசே பாராட்டிற்குரியது என்கின்றனர் உலக அரசியலறிஞர்கள். தமிழ்நாடு அரசும் பல வகைகளில் அறிஞர்களைப் போற்றுகிறது. அவர்கள் மூலம் அறிவுத் தளத்தை விரிவாக்குகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போற்றுதலுக்குரியது. அறிஞர்களையும் வல்லுநர்களையும் பாராட்டும் பொழுது சமநிலை இருக்க வேண்டும். திறமைக்கேற்பப் பாராட்டுதல்கள் அமைய வேண்டும். அவ்வாறு சமநிலை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அக்குறையைக் களைய வேண்டுகிறோம். தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக அரசு விருதுகள் அளிப்பதுபோல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்…