அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 21-23
(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20- தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 21. நரியும் பூனையும் காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது. நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது. சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் களிப்புற்றது. மற்றொருநாள் பூனை நரியை நகரத்திற்குள் விருந்துக்கு அழைத்தது. நகரத்திற்குள் வர நரி முதலில் தயங்கினாலும், பூனை கூறிய…