அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 36-38
(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 33-35-தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 36. கிளியும் ஓநாயும் ஒரு காட்டிலுள்ள ஆலமரத்தின்மேல் அமர்ந்திருந்த கிளியும், கீழே நின்றிருந்த ஓநாயும் இவ்வாறு பேசிக் கொண்டன : கிளி : ஓநாய் அண்ணே! ஏன் விசனமா இருக்கீங்க? ஓநாய் : உனக்குச் சங்கதி தெரியாதா கிளித்தங்கச்சி. நான் வேறே காட்டுக்கல்லவா போகப்போறேன். கிளி : ஏன் வேறு காட்டுக்குப் போறீங்க? ஓநாய் : இந்தக் காட்டிலிருக்கிற புலியும் சிறுத்தையும் என்னைக் கண்டால் கடிக்க வருதுங்க. மானும் முயலும்…