உ.வே.சா.வின் என் சரித்திரம் 112: அத்தியாயம் – 74: நான் பதிப்பித்த முதல் புத்தகம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 111: அத்தியாயம் – 73: நானே உதாரணம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-74 நான் பதிப்பித்த முதல் புத்தகம் திருநெல்வேலியில் மேலை இரத வீதியில் திருவாவடுதுறைக்குரிய மடம்ஒன்று உண்டு. அதனை ஈசான மடம் என்று சொல்லுவர். நானும் மகாவைத்தியநாதையர் முதலியோரும் மதுரையிலிருந்து போன சமயம்அவ்விடத்தில் மடாதிபதியாகச் சாமிநாத தம்பிரானென்பவர் இருந்துஎல்லாவற்வையும் கவனித்து வந்தார். நாங்கள் அவருடைய ஆதரவில் அங்கேதங்கியிருந்து சுப்பிரமணிய தேசிகரது வரவை எதிர்பார்த்திருந்தோம். வாதம் தேசிகர் பல சிவ தலங்களைத் தரிசித்த பிறகு திருநெல்வேலி வந்துசேர்ந்தார். பாண்டி நாட்டிலுள்ள பிரபுக்கள் பலரும்…