உ.வே.சா.வின் என் சரித்திரம் 110: அத்தியாயம் – 72: நான் பெற்ற சன்மானங்கள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 109 – அத்தியாயம்-71, சிறப்புப் பாடல்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் – 72 நான் பெற்ற சன்மானங்கள் முன் குறிப்பிட்ட தட்சிணம் பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் அம்பா சமுத்திரத்துக்கு அருகில் உள்ள செவந்திபுரத்தில் அழகான பெரிய மடம் ஒன்றைக் கட்டுவித்து, அதற்கு, “சுப்பிரமணிய தேசிக விலாசம்” என்று பெயரிட்டார். அப்பால் அவர் ஒரு முறை திருவாவடுதுறைக்கு வந்து சுப்பிரமணிய தேசிகரிடம், “சந்நிதானம் திருக்கூட்டத்துடன் செவந்திபுரத்துக்கு எழுந்தருளிச் சில தினங்கள் இருந்து கிராமங்களையும் பார்வையிட்டு வரவேண்டும்” என்று விண்ணப்பம்…