சுதா சேசையன் நியமனத்தை வரவேற்கலாமே(!)- இலக்குவனார் திருவள்ளுவன்
சுதா சேசையன் நியமனத்தை வரவேற்கலாமே(!) மரு.சுதா சேசையனைச் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக அமர்த்திய பொழுது செய்தி ஆசிரியர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார். தெரிவித்தவர், “தமிழறிஞர் அல்லாத ஒருவரை எப்படி நியமிக்க முடியும்? கண்டித்து அறிக்கை வெளியிடுங்கள். வெளியிடுகிறோம்” என்றார். நான் அதற்குத், “தமிழ் தொடர்பான துறை என்றால் தமிழறிஞரல்லாதவர் அல்லது தமிழறியாதவர் அல்லது தமிழரல்லாதவரை அமர்த்துவதுதான் மரபு. இம்மரபைப் பின்பற்றி யுள்ளனர். இதில் கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது” என்றேன். மேலும் “இஃது ஓர் அதிகாரமில்லாத பதவி. இதை அறியாமல் அவர் வந்திருக்கலாம். இவர்…