ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௪. திருத்தமாய்ப் பேசுங்கள்!–வி.பொ.பழனிவேலனார், தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன இன்றைய தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கென செய்து வரும் பணிகள் பலவாகும். தஞ்சையில் தொடங்கவிருக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகம் அவற்றிற்கு முத்தாய்ப்பு வைத்தது போன்றதாகும். ஆயினும், நடைமுறையில் சில வழுக்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல தமிழ்க்கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் தமிழ்ப்புலமை பெற்று வெளியேறுகின்றனர். பலர் தமிழாசிரியர் பயிற்சியும் பெறுகின்றனர். தமிழ் பயின்று, தமிழாசிரியர் பயிற்சியும் முடித்த பல்லாயிரவர், பணியின்றி வாடுகின்றனர். ஆனால், அஞ்சல்வழியும், தனியேயும் பலர் படித்துத் தமிழாசிரியராகி விடுகின்றனர். தமிழ்க்…