செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 3/3
(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3 தொடர்ச்சி) “மகராசி என்னும் வள்ளி யம்மையைநன்மனை அறங்களை நன்கு வளர்த்திடமுன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன்……………………………………………………………….எனதொரு வடிவும் எனக்குறு தொண்டுமேகனவிலும் நனவிலும் கண்டவள் நின்றவள்என்னைப் பெற்றோர், என்னொடு பிறந்தோர்என்னை நட்டோர் யாவரும் தன்னுடைஉயிரெனக் கருதி ஊழியம் புரிந்தசெயிரிலா மனத்தள்; தெய்வமே அனையள்.” இப்பாடல் வழி வ.உ.சி.யின் தெள்ளுதமிழ் அகவல் நடையின் அழகினையும் மாண்பினையும் உணரலாம். 3. உரையாசிரியப் பணி நாளும் தமிழ்ப் பணியில் கருத்தூன்றிய சிதம்பரனார் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் சிவஞான போதத்திலும், கைவல்ய நவநீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார்….