(உ.வே.சா.வின் என் சரித்திரம் 106 – திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் – 69 இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை திருச்சிராப்பள்ளியில் என் ஆசிரியருக்கு மிகவும் பழக்கமான இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளையென்னும் கனவான் ஒருவர் இருந்தார். அவருடைய சொந்த ஊர் திருவேட்டீசுவரன் பேட்டை. அவர் தமது கல்வித் திறமையாலும் இடைவிடா முயற்சியாலும் நல்ல ஒழுக்கத்தாலும் சிறிய உத்தியோகத்திலிருந்து படிப் படியாக அக்காலத்தில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பெற்ற டிப்டி கலெக்டர் என்னும் பெரிய உத்தியோகத்தை அடைந்து புகழ் பெற்றார். அவருடைய மேலதிகாரிகளுக்கு அவரிடத்தில்…