இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ படித்தேன்! இன்புற்றுக் களித்தேன்! – முனைவர் குமரிச் செழியன்
இலக்கியத்திலிருந்து பெறப்படுவதுதான் இலக்கணம் என்றாலும் இலக்கியத்தின் அழகுக்கும் இளமைக்கும் கட்டுக்கோப்பு குலையாமல் காப்பதற்கும் இலக்கணம் முக்கியமானது. எனவே, இலக்கியத்திலிருந்து இலக்கணமும், இலக்கணத்தின் வழியே இலக்கியமும் வளம் பெற்று வளர்ந்த சிறப்பு தமிழ் மொழிக்கே உரியது. எனவே, இலக்கியம், இலக்கணம் என்பவை தூய தமிழ்ச் சொற்களே. எழுத்துக்களே இல்லாத மொழியில் சொல்கள் எப்படி இருந்திருக்க முடியும். எனவே, இலட்சியமே இலக்கியமாயிற்று என்பாரின் கூற்று வெறும் பேத்தலே. அது போல்தான் இலக்கணமும் என்க. இலக்கணம் என்றும் தமிழ்ச்சொல்தான் இலட்சணமாயிற்று என்க. தொல்காப்பியத்தின் சொல்கள் பல வடமொழி…
