நாலடி நல்கும் நன்னெறி 21: – கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 20: – பிறன் மனைவியை விரும்பாதே: தொடர்ச்சி) கற்காத, ஈயாத, அறம் செய்யாத நாள் நாளில்லை கல்லாது போகிய நாளும், பெரியவர்கண்செல்லாது வைகிய வைகலும், – ஒல்வகொடாஅ தொழிந்த பகலும், உரைப்பின்படாஅவாம் பண்புடையார் கண் நாலடியார் பாடல் 169 பண்புடையவ ர்கள் படிக்காமல் இருக்கும் நாள் இல்லை;பெரியவர்களிடம் சென்று பழகாத நாள் இல்லை; தன்னால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுக்காத நாள் இல்லை. பதவுரை: கல்லாது=கற்க வேண்டிய நூற்களைக் கற்காது; போகிய=போன; நாளும்=நாள்களும்; பெரியவர்கண்=பெரியோரிடத்து; செல்லாது= போகாது; வைகிய=இருந்த; வைகலும்= நாள்களும் ஒல்வ=முடியக்…
பழமொழியில் விளைந்த கனிகள் – இ. சூசை
காண்ஒளி வந்தபின்னும் வானொலி விருமபும் நேயர்களே! வணக்கம். தமிழின் வாழ்வில் பட்டறிவில் விளைந்தவை பழமொழிகள். முன்னோர் கூறிய பழமொழிகள் நம்மை நெறிப்படுத்தும் உயர்பண்பாளர்கள் ஒருபோதும் அழிசெயல்திட உடன்படமாட்டார்கள். கடுங்கோபம் வந்தாலும் சான்றோர் வைதாலும், தீய செயல்களைச் செய்திட உடன்பட மாட்டார்கள். உயர்பண்பு இல்லாத இழிந்தோர் தீங்கு செய்யும்போது ஆத்திரம் வரும். மாண்போடு பிறந்து வாழ்ந்தவர்கள் கோபப்படுவதில்லை. . இதனைப், பழமொழி நானூறு(51), “நல்ல விறகிலும் அடினும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலா வாறு” என்கிறது. நிறைய, தரமான விறகினால் சூடேற்றினாலும், தண்ணீர்…
