பாடு மனமே பாடு !   எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள் ஏந்தும் இசையளிக்கும் இன்பம்! பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும் போதும் இனியெதற்குத் துன்பம் ! இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை என்றும் மனச்சுமையைப் போக்கும் ! அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும் அமுதச் சுவையழகைத் தேக்கும் ! பாடும் குயிலுடனே பருவ மங்கையவள் ஆடிக் கழித்திடுவாள் தினமே ! நாடி வரும்துயரும்  நகரும் இன்னிசையால் நல்ல மருந்திதுதான் மனமே ! காதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை ஆளும் எமதுயிரை  இதமாய் ! பாழும்…