அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 16. தியாகக்கதை & 17. இன்சொலின் சிறப்பு
(அறிவுக்கதைகள்நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 13-15-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 16. தியாகக் கதை ‘தன்னல மறுப்பு’வட மொழியிலே ‘தியாகம்’ என்பது – தமிழிலே ‘தன்னல மறுப்பு’ என்றாகும். மக்களாகப் பிறந்தவர்கள் தன்னலமற்ற வாழ்க்கை வாழவேண்டுமென்பது தமிழ்ப் பண்பாடும், தமிழர் பண்பாடும், தமிழகத்துப் பண்பாடும் ஆகும். இதனை, ‘பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளார்; புகழெனின் உயிரும் கொடுக்குவர். தனக்கென முயலா நோன்றாள். பிறர்க்கென முயலுநர்’ என்று, புறநாறூறு இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது. ‘கோழி’கோழி தன்னை விலை கொடுத்து வாங்கியவனுக்கு முட்டைகள் இட்டு உதவி,…