தாமரையின் ஊழல் முகம் ! – பாரதி தம்பி
தாமரையின் ஊழல் இதழ்கள் ! – பாரதி தம்பி மக்களின் அவநம்பிக்கையைப் பெற, காங்கிரசுக்கு 10 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் பாரதிய சனதா கட்சியோ, ஒரே வருடத்துக்குள் மாபெரும் மக்கள் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கிறது. காங்கிரசை மக்கள் நிராகரிக்க ஊழல் காரணம் என்றால், இந்த ஓர் ஆண்டில் பா.ச.க அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் வாதாட்டங்களும் ஒவ்வொரு நாளும் சந்தி சிரிக்கின்றன. இலலித் மோடி முதல் ‘வியாபம்’ வரை புதுப் புது ஊழல்கள்; புதுப் புது வாதாட்டங்களள்! தலைமையாளர் மோடி, எதற்குமே வாய் திறப்பது…