சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…

அமுதசுரபி ஆண்டு விழா

  அமுதசுரபி ஆண்டு விழா பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 09, 2016 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் :  தவுட்டன் உணவகம்( Doveton Cafe), 5- புரசைவாக்கம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம், சென்னை நூல்கள் வெளியீடு செப்பேடு பாவலர் கருமலைத்தமிழாழன் மரபுக் கவிதை நூல். அன்புள்ளமே முனைவர் கோமதி கேசவன் புதுக்கவிதை நூல். நம் அமுதசுரபி மாத இதழ் அமுதசுரபி கவிதைகள் முகப்புத்தகத்தில் தேர்ந்தெடுத்த 100 கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு. கவிதை அரங்கம், கலந்துரையாடல்,…

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்

சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே ! சாதிமணி உலையிலிட்டுச் சதிவெறியாம் பாலையூற்றி மோதிபகை வளர்வெல்லம் மொத்தமுமாய் அதிலிட்டு வீதிகளில் குருதிவாடை வீசிடவே மனக்குடத்தில் ஆதிக்கம் பொங்வைத்தே ஆடுவதா பொங்கலிங்கே ! காடுகளில் உழைப்பவரை கழனிசேற்றில் புரள்பவரை ஆடுகளின் மந்தையாக அடித்தட்டில் தாழ்ந்தவராய் மாடுகளைப் போல்விரட்டி மனிதகுலம் தலைகுனிய கேடுகளை விளைவிக்கும் கேளிக்கையா காணும்பொங்கல் ! தெருவெல்லாம் அன்பென்னும் தோரணங்கள் கட்டிவைப்போம் கரும்புசுவை மனமேற்றிக்…

நம்மொழியை நாமறிவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்

நம்மொழியை நாமறிவோம்!   இத்தாலி நாட்டிலிருந் திங்கே வந்து இயேசுபிரான் கருத்துகளைப் பரப்பு தற்கே முத்தான தமிழ்மொழியைப் பேசக் கற்று முதலில்தம் பெசுகியெனும் பெயரை மாற்றித் தித்திக்க வீரமா முனிவ ரென்று திருத்தமுறத் தமிழினிலே சூட்டிக் கொண்டு வித்தாகக் கிறித்துவத்தை விதைப்ப தற்கே வீதிகளில் மதக்கருத்தை உரைத்து வந்தார் ! ஓரிடத்தில் உரையாற்றும் போது பேச்சில் ஒருகோழி தன்னுடைய குட்டி தன்னைப் போரிட்டுக் காப்பதைப்போல் என்றே உவமை பொருத்திச்சொல்லக் கேட்டமக்கள் சிரித்து விட்டார் கூறியதில் தவறேதோ உள்ள தென்று கூட்டத்தைப் பார்த்தவரும் கேட்கும் போது…