கமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்! குற்றவாளி ஒருவரை அவரது மதம், சாதி, கட்சி, நாடு, ஊர், இனம், அமைப்பு சார்ந்து குற்றவாளியாகத் திரிப்பது தவறு. ஆனால், பல நேரங்களில் அவ்வாறுதான் செய்திகள் வருகின்றன. இந்த ஊர்க்காரர் கைது, அல்லது இந்தச் சாதிக்காரர் செய்த கொலை இந்த மதத்துக்காரர் செய்த குண்டு வெடிப்பு என்பன போன்ற செய்திகளைப் பார்க்கிறோம். தனி மனிதத் தவறுகளைப் பொதுமை ஆக்குவது தவறாகும். ஆனால், அதே நேரம், ஒரு மதம் சார்ந்த அல்லது கோட்பாடு சார்ந்த குழு அல்லது அமைப்பு தங்களின்…
இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! கட்சி முறையில் இன்றித் தனிப்பட்ட முறையில் பார்த்தால் இராகுலிடம் தற்சார்புச் சிந்தனையும் மனத்தில் சரி என்று பட்டதை ஆற்றும் துணிவும் உள்ளமை புரிகிறது. கலைஞர் கருணாநிதியிடம் ஒத்துப்போகாத அவர், தாலினுடன் இணைந்து செயலாற்றுவதும் அவரது தற்சார்பின் விளைவே ஆகும். பேராயக்(காங்.)கட்சியும் அடிப்படையில் பா.ச.க.போன்றதே. எனவேதான் இராகுல் தன்னை வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிட்டும் மதத்தைக் குறிப்பிட்டும் அடையாளம் காட்டிக் கொள்கிறார். பசுக்கள் காப்பகம் குறித்த அவர் கருத்தும் அத்தகையதே. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்கிறவர் உயர்…
வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? – இலக்குவனார் திருவள்ளுவன்
வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? 2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்காகவும் உடன் நடத்தப்படுகின்ற இடைத் தேர்தல்களுக்காகவும் வழக்கம்போல் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி வைத்துள்ளன. வழக்கம்போல் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துச் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் பாசகவுடனும் பாசகவுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் வைத்துள்ள கூட்டணி மக்கள் யாவரும் அறிந்ததே. ஆனால் இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்றால் எதிர் விளைவுகளால் வெற்றி மாலை நழுவிப்போகும் என்பதே உண்மை. வாக்காளர்களை விலைக்கு வாங்கி வாக்கு…
மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே! – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்
மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே! மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள் 1, தாள் 2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும். மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால், மொழி அறிவு என்பது அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவியல் முதலான பிற மொழிப்பாடங்களைப் படிப்பதற்கும் மொழி அறிவு துணை நிற்கின்றது. அறிவில் சிறக்கத் துணையாய் இருக்கும் தாய்மொழி அறிவு குறைக்கப்படுவது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்….
வைரமுத்துவும் ஆண்டாளும் – குவியாடி ,இ.எ.தமிழ்
அனலும் புனலும் : தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும் தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால் வைரமுத்துவின் அன்னையை – வேசி என்று சொல்லும் எச்சு.இராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை! ஒரு சொல் என்பது எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது, எந்தக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொருத்தே பொருளைத்தரும். யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொருத்தும் பொருள் மாறுபடும். தாசி என்பது வேலைக்காரியைக் குறிக்கும். எனவே, இறைவனுக்கு – இறைவன் கோயிலில் வேலை செய்யும் பெண் தாசி எனப்பட்டாள். தாசன் என்பது…
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! – தமிழ்நாடன், நக்கீரன்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! ‘ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப்பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள். கவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்… இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதற்றப் பரபரப்பைப் பற்றவைக்க… இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன. இஃது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதற்றப் பரபரப்பிற்கும் காரணம்,…
நோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்? – இலக்குவனார் திருவள்ளுவன்
நோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்? செயலலிதா முதல்வராகச் செயலபட்ட பொழுதே அவர் நோய்க்கு ஆளாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்றும் ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்களை வெவ்வேறு நாளில் எடுக்கப்பட்டனபோல் காட்டி அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும் செய்திகள் வந்தன. இவை யாவும் செயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னரே நோய்வாய்ப்பட்டு இருந்தார் என்பதை மெய்ப்பிக்கின்றன. நோய்வாய்ப்பட்டவர் மருத்துவத்தில் பயனின்றி மரணமுற்றதைக் கொலைபோல் கருதிக் கூறுவது ஏன் என்று தெரியவில்லை. செயலலிதாவைச் சாகடித்த பின்னரே மருத்துவமனையில்…
பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்
பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு! ஆடி 01, 2048 /சூலை 17, 2017 அன்று இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின்போக்கை மாற்றச் செய்வதற்குத் தன்மான உணர்வு உள்ள அதிமுக மக்கள்சார்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பு! இந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களத்தில் இரு்பபவர்கள், பா.ச.க. அணியின், இராம்நாத்து கோவிந்து(Ramnath Kovind) எதிர்க்கட்சிகள் அணியின் மீரா குமார்(Meira Kumar) ஆகிய இருவர் மட்டுமே! கட்சி வாக்குகள் அடிப்படையில் பா.ச.க.வின் வெற்றி வாய்ப்பு என்பது எழுதப்பட்டதாகத் தெரிகிறது….
தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்! பா.ச.க.வின் கைப்பாவையாக இந்தியத் தேர்தல்ஆணையம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் ஆட்சியில் தடுமாற்றமும் தமிழக அரசியலில் குழப்பமும் ஏற்பட்டுள்ளன. கட்சிகளில் பிளவு என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால், கட்சியின் தலைமையை முடிவு செய்பவர்களாக மக்கள்தாம் இருந்துள்ளார்கள்! தேர்தல் ஆணையம் அல்ல! பேராய(காங்கிரசு)க் கட்சியில் பிளவு பட்ட பொழுது இந்திரா காந்தியின் தலைமைக்கு ஏற்பளித்தவர்கள் மக்கள்தாம், தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில் பிளவு வந்தபொழுது அதிமுகவிற்கு ஏற்பளித்தவர்களும் மக்கள்தாம்! தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில்…
அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது? – இலக்குவனார் திருவள்ளுவன்
அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது? கலைஞர் கருணாநிதியின் 94 ஆம் பிறந்தநாள் பெருமங்கலத்துடன் சட்டமன்றப்பணிகளின் மணிவிழாவும் நடைபெற உள்ளது.(60 ஆண்டினைக் குறிக்கும் இதனை மணிவிழா என்றுதான் சொல்ல வேண்டும். வைர விழா என்பது தமிழர் மரபல்ல.) இவ்விழா அரசியல் சார்புடையது எனப் பொன்.இராதாகிருட்டிணன், தமிழிசை முதலான பா.ச.க.தலைவர்கள் கூறுகின்றனர். தன் வாழ்வில் பெரும்பகுதியை அரசியல் உலகில் செலவிட்டவரின் பிறந்தநாளின்பொழுது அரசியல் பேசாமல் எப்படி இருக்க இயலும்? அரசியல் தலைவர்கள் தேநீர் அருந்தும்பொழுதும் இணைந்து உண்ணும்பொழுதும்…
தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! பொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே! பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்? ஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம் யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப் புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள். இங்கே அவ்வாறு தேர்தல் ஆணையர் யாரும்…
இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அரசேற்பு அளிப்பதா?- வைகோ கண்டனம்
இந்தித் திணிப்புக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அரசேற்பு அளிப்பதா? வைகோ கண்டனம் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மத்திய அரசு எங்கும் எதிலும் இந்தி மொழி கட்டாயம் என்பதைச் செயல்படுத்தி வருகின்றது. பா.ச.க. அரசின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு அரசேற்பு அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் இனி இந்தி மொழியில்தான் பேசவும், எழுதவும் மற்றும் அறிக்கை வெளியிடவும் வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டு இருக்கின்றார். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான நாடாளுமன்றக் குழு கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த…