உ.வே.சா.வின் என் சரித்திரம் 97 : பிரசங்க சம்மானம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 96 : அங்கே இல்லை- தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-61 பிரசங்க சம்மானம் காரைக்கு வந்தவுடன் திருவிளையாடற்புராணப் பிரசங்கத்தைப் பூர்த்தி செய்யும் விசயத்தில் எனக்கு வேகம் உண்டாயிற்று. “இன்னும் கொஞ்சநாள் பொறுத்தால் அதிகத் தொகை சேரும்” என்று சிலர் கூறினர். “கிடைத்தமட்டும் போதுமானது” என்று கிருட்ணசாமி ரெட்டியாரிடம் சொன்னேன். பிள்ளையவர்கள் தமக்கு எழுதிய கடிதத்தைக் கண்டு அவர் அளவற்ற ஆனந்தமடைந்தார். அவர் விசயமாக அப்புலவர் பிரான் எழுதியிருந்த பாட்டைப் படித்துப் படித்துப்பெறாத பேறு பெற்றவரைப் போலானார். “உங்களுடைய சம்பந்தத்தால் அம்மகா…