கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை-தொடர்ச்சி) பூங்கொடி ஏமகானன் தூண்டு மொழி தங்கத் தேவன் தகவல் அறிந்ததும் `எங்குஅத் தீயவன் ஏகினும் ஓயேன்; யாங்குறின் என்ன? வேங்கையின் பகையைக் 180 கிளறி விட்டவன் கேடுறல் திண்ணம்; ————————————————————— கட்படு – கண்ணில்படும், செகுத்து – அழித்து, முனம் – முன்பு. ++ உளறித் திரியுமவ் வுலுத்தன் தலைதனைக் கொய்தமை வேன்’எனக் கூறி முடிக்கக் கைதவன் ஏம கானன் கயவனும் `நிற்பகை கொண்டோர்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 72 : தங்கத் தேவன் கொதிப்புரை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 71 : ஏமகானன் பாராட்டுரை-தொடர்ச்சி) பூங்கொடி தங்கத் தேவன் கொதிப்புரை `வடபுலப் பெரியோய்! வாட்டம் தவிர்தி! வடமொழி வெறுத்து வழுத்தமிழ் கோவிலில் இடம்பெற முயலும் இழிமகன் செருக்கினை அடக்கிட அழைத்தேன், கோவிலில் தமிழ்புகல் விடத்தகு செயலோ? தடுத்திடல் வேண்டும்; 145 மந்திர மொழியை வடமொழி தவிர்த்துச் செந்தமி ழாற்சொலின் செத்து மடிகுவர்; கோவிலைத் தொலைக்கஇக் குறுமகன் இப்பணி மேவினன் போலும், மிடுக்கினைத் தொலைப்போம்; தேவ பாடையின் சிறப்பினை நாட்டுவோம்; 150 யாவரும்…