(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 17, அறா அலியரோ அவருடைக் கேண்மை!-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி 15. தமிழின் இனிமை தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. “இனிமையால் இயன்ற இளமகளிர்” என்ற பொருள்படவரும் “தமிழ் தழிஇய சாயலவர்” என்ற தொடரில் வரும் “தமிழ்” என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித் தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார் சீவக சிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தக்கத் தேவர். ‘ஒண் தமிழ்’, ‘தேமதுரத்தமிழோசை,’ ‘தமிழ் எனும் இனிய தீஞ்சொல்’ என்றெல்லாம் பெயர் சூட்டிப், புலவர்கள், தமிழின்…