(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 54 : எரிந்த ஏடுகள் – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடியின் பூரிப்பு  அணங்கிற் கின்பம் அகத்தினிற் பொங்க அன்னாய் என்னுயிர் அன்னாய்! தமிழே! ஒன்னார் மனமும் உருக்குந் கமிழே! அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே ! தகப்பன் தாயெனத்  தகுவழி  காட்டி மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே!           உலகம் வியக்க ஒப்பிலாக் குறளால்       135           கலகம் தவிர்ப்பாய் கன்னித் தமிழே! இறக்கும் வரைநின் பணியே யல்லால் துறக்கமொன் றுண்டெனத் துணியேன் தமிழே! இடுக்கண் வருங்கால் துடைப்பாய்…