(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 07. திருக்கோவையார் உரைநயம் -தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 5. பெருமை என்பது கெடுமோ? கன்னித் தமிழ் நாட்டில் கடல் வளம் கொழிக்கும் கவின் மிக்கது அந்நாடு. இயற்கை அன்னை அளித்த அரிய செல்வமாய் உப்பு, சிறு சிறு குன்றுகள் போல் ஆங்குக் குளித்து கிடக்கும் உப்பை உள்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கும் உமணர் எனும் உப்பு வணிகர் வண்டிகளை வரிசை வரிசையாக ஓட்டி வந்து நிறுத்தி உப்புப் பொதியேற்றும் காட்சியும், அவ்வண்டிகளில் பூட்டப்பெற்ற வலிய காளைகள்…