அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், அணிந்துரையும் பதிப்புரையும்-தாெடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் பேச்சாளனின் எழுத்துரை வணங்கி மகிழ்கின்றேன். உலகம் அறிவியலின் உறைவிடம்;அறிவியல் உலகத்தின் உயிர்மூச்சு;“உலகம் தழீஇயது ஒட்பம்” 1 என்னும் திருவள்ளுவர் வாய் மொழி இவை இரண்டின் புதையல். இவ்வாறு எழுதுவதை மிகைபட எழுதுவதாகவோ ஆர்வத்தை மட்டும் வெளிப்படுத்துவதாகவோ கருதுவோர் நூலினுள் புகுந்து வெளிவரின் புதையல்தான்’ என்று ஒப்புவர். அறிவியல் திருவள்ளுவம், அறிவியல் திருமகனாரின் அணிந்துரையால் அழகில் திகழ்கிறது. – சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் க. ப. பொன்னுசாமி அவர்கள் இவ்வறிவுப் பொலிவை…