மருந்துகளைத் தெளித்து மீன்களைப் பிடிக்கும் மருமக் கும்பல்-நோய்கள் பரவும் பேரிடர்
தேனிப் பகுதியில் மருந்துகள் தெளித்து மயக்கமடையச் செய்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், உடலுக்குக் கேடு விளையும் கண்டம் உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், முதலக்கம்பட்டி பகுதிகளில் ஆறுகளில் உள்ள பாறைகள், பாறைகளின் இடுக்குகள், ஆறு, கண்மாய், ஓடைகளில் உள்ள சந்து பொந்துகளில் குரவை மீன்களும் வேறு சில வகை மீன்களும் வாழுகின்றன. இவ்வகை மீன்களை வலைவீசியோ தூண்டில் போட்டோ பிடிக்க முடியாது. இவ்வகை மீன்கள் விலையும் அதிகம். இதனால் இவ்வகை மீன்கள் வாழும் இடத்தைக் கண்டறிந்து மீன்கள்…