கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 59 : இசைப்பணிக்கு எழுக எனல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன -தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைஇசைப்பணிக்கு எழுக எனல் இசைத்தமிழ் முழக்குக எங்கணும் பெரிதே! 120 +++++++++++++++++++++++++++++++++++++++++++++வசைத்தொழில் புரிவோர் வாய்தனை அடக்குக!இசைப்பணி புரிதல் இனிநமக் கேலாதுவசைத்தொழில் ஈதென வாளா விருந்தனை!திசைத்திசைச் சென்று செந்தமிழ்ப் பாட்டின்இசைத்திறன் காட்டுதி இனிநீ தாயே! 125நின்னுயிர் பெரிதோ? தென்மொழி பெரிதோ?இன்னுயிர் ஈந்தும் இசைத்தமிழ் பேணித்தோமறு பணிசெயத் துணிந்தெழு நீ’என, அடிகளார் வாழ்த்து ஆம்என மொழிந்தனள் ஆய்தொடி அரிவை;`தாய்க்குலம் வாழ்க! தமிழினம் வாழ்க! 130ஏய்க்கும் தொழில்போய் ஏர்த்தொழில் வாழ்க!வாழ்கநின் னுள்ளம்! வாழ்கநின்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 58 : தொண்டர்க்கு வேண்டுவன
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்-தொடர்ச்சி) பூங்கொடி மலையுறையடிகள் வாழ்த்திய காதை தொண்டர்க்கு வேண்டுவன தொண்டுபூண் டார்க்குத் தூயநல் லுளனும், கண்டவர் பழிப்பாற் கலங்கா உரனும், துயரெது வரினும் துளங்கா நிலையும், அயரா உழைப்பும், ஆயும் அறிவும், தந்நல மறுப்பும், தகவும் வேண்டும் 105 இந்நல மெல்லாம் ஏற்றொளிர் நீயே; இருளும் தொண்டும் விளக்கிடை நின்றான் வீங்கிருள் புகுவோன் துளக்கம் கொள்வான்; துணைவிழிப் புலனும் ஒளியிழந் தொருபொருள் உணரா திருக்கும்; கழியிருள் அதனுள் கடந்தனன்…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 57 : தமிழினமும் குரங்கினமும்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை-தொடர்ச்சி) பூங்கொடிமலையுறையடிகள் வாழ்த்திய காதைதமிழினமும் குரங்கினமும் தமிழினம் என்றே சாற்றுதல் கண்டோம்;தாய்க்குரங் கொருகிளை தாவுங் காலைத்தாய்மடி பற்றுதல் தவறுமேல் குட்டியைக் 75குரக்கினம் தம்மொடு கொள்ளா தொழிக்கும்;மரக்கிளை வாழும் மந்தியின் மானம்நமக்கிலை அந்தோ! நாமோ மாந்தர்!மானம் பரவுதற் கானவை இயற்றுக; தாய்மையும் பொதுப் பணியும் பிணியற மருந்துகள் பெட்புடன் ஈய,அறியாக் குழவி அலறுதல் போல,அறியா மைப்பிணி அகற்றுதல் வேண்டிப்பெரியோர் நல்லுரை பேசுதல் கேட்டுச் 85சிறியோர் மருளுவர் சீறுவர்; அவர்தமைப்பொதுப்பணி புரிவோர் ஒதுக்குதல் இன்றித்தாய்மைப் பண்பே…
கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 12 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை பூங்கொடி மலையுறையடிகளை அடைதல் தாயும் தோழியும் தன்னுடன் தொடர ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர் சாயா நாவினர் தங்கிடன் குறுகிக் காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க மலையுறை யடிகள் மலரடி வணங்கிக் 5 பூங்கொடி நிகழ்ந்தன கூறல் காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம், ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம், தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம், அழுக்கிலா வாழ்க்கை…