(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம் தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம்  உ.ஏமம் 3. கல்வி ஏமம்                     “ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு                    எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (398) இங்கும் ஒருமை, எழுமை மாந்தப் பருவங்களையே குறிக் கும். ஒரு பருவமாகிய சிறுவன் பருவத்தில் ஒருவன் கற்க வேண்டும். கற்றால் அவனுக்கு அக்கல்வி தொடர்ந்து முதுமை வரை வரும் ஏழு பருவங்களுக்கும் பாதுகாப்பு ஆகும். கல்வியால் பெற்ற அறிவுப் பாதுகாப்பு ஆறறிவு மாந்தனை உண்மையில் மாந்தனாக வைத்திருக்கும். கல்வியை “எண்என்ப, ஏனை எழுத்து என்ப”…