அகல் விளக்கு – மு.வரதராசனார்: 38
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 37. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. “நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?” என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன ஊர். உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே. ஒருநாள் இரவு தங்கி உறுதி…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 37
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 36. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், “நான் தேறிவிடுவேன்” என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, “செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?” என்றேன். “சோதிடம் கேட்டேன்” என்றான். “சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!” என்று சிரித்தேன். “குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்” என்றான். என்…
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 36
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 35. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 தொடர்ச்சி “முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். “நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்….
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 35
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 34. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 தொடர்ச்சி எங்களைப் பின் தொடர்ந்திருக்கிறார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் ஏறிய பேருந்திலும் ஏறினார். அங்கும் முரடன் நடந்து கொண்ட முறையைக் கவனித்திருக்கிறார். அவன் ஒதுங்காமல், முன்னுக்கும் செல்லாமல் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான் அல்லவா? என் பக்கமாகத் தன் கால்களை நகர்த்தி என் கால்கள்மேல் படுமாறு செய்தான். நான் என் கால்களை எவ்வளவோ ஒடுக்கி உட்கார்ந்தும் பயன் இல்லை. எனக்கு அழமட்டாத குறைவாக இருந்தது. ஒரு புறம் கோபமாகவும் இருந்தது….
அகல் விளக்கு – மு.வரதராசனார்: 34
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 33. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 அதற்கு மறுநாள் எங்கள் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊர்க்குப் போகத் திட்டமிட்டோம். மாலையில் மாலனும் நானும் கீழ்ப்புறத்துச் சிமெண்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே திண்ணையில்தான் எங்கள் நட்பு அன்று ஒருநாள் வேர் கொண்டது. அன்று சந்திரனுடைய ஒத்திகையை – பெண்ணாக நடித்த திறமையைப் பார்த்து மனத்தில் பாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நாள் நினைவுக்கு வந்தது. சந்திரனிடத்தில் அதுவரையில் கண்டிராத திறமையை அன்று அவனிடம் கண்டேன்….
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : கரிச்சான்குஞ்சு
அன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த மாதம் – 08.11.2016 செவ்வாய் அன்று மாலை 06.30 மணிக்கு – ‘மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு‘ இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் தலைமை: திரு தி.அருணன் சிறப்புரை : திரு மாலன் அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் இணைப்புரை: முனைவர் ப.சரவணன் உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்